NEET PG 2025 தேர்வுக்கான ஹால் டிக்கெட் ஜூலை 31–ல் வெளியாகும் என்றும், தேர்வு மைய விவரங்கள் ஜூலை 21–ம் தேதிக்கு முன் மின்னஞ்சலில் அனுப்பப்படும் என தேசிய தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான NEET PG 2025 தேர்வு வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு, தேசிய மருத்துவத் தேர்வு வாரியம் (NBEMS) சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அவர்கள் தேர்வு எழுத வேண்டிய மையம் குறித்த தகவல் ஜூலை 21ஆம் தேதிக்குள் இ-மெயில் மூலம் அனுப்பப்படும். ஏற்கனவே தேர்வு மையம் மாற்றம் ஜூன் 13 முதல் 17 வரை அனுமதிக்கப்பட்டது. ஹால் டிக்கெட் ஜூலை 31 அன்று வெளியிடப்படும். அதில் தேர்வுக்கான நேரம், மையம் உள்ளிட்ட முழுமையான தகவல்களை தெரிந்து கொள்ளலாம். தேர்வின் நேரம் காலை 9 மணி முதல் 12.30 மணி வரை ஆகும். சந்தேகங்களுக்கு +91-7996165333 என்ற உதவி எண்ணை காலை 9.30 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்பு கொள்ளலாம். மேலும் தகவலுக்கு natboard.edu.in மற்றும் nbe.edu.in இணையதளங்களை பார்வையிடலாம். தேர்வின் முடிவுகள் செப்டம்பர் 3ஆம் தேதி வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.














