நீட் தேர்வு முடிவு வெளியாகியதில், முதல் 10 இடத்தில் தமிழ்நாடு மாணவர்கள் 4 பேர் இடம் பெற்றுள்ளனர்.
இளநிலை மருத்துவப்படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. அதில் தமிழ்நாடு மாணவர் பிரபஞ்சன் 99.99 சதவிகித மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். அதேபோல், ஆந்திரபிரதேசத்தை சேர்ந்த மாணவர் வருண் சக்ரவர்த்தியும் 99.99 சதவிகித மதிப்பெண் பெற்று முதல் இடம் பிடித்துள்ளார். நீட் நுழைவுத்தேர்வில் முதல் 10 இடத்தில் 4 தமிழ்நாடு மாணவர்கள் இடம்பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் இருந்து 1 லட்சத்து 44 பேர் நீட் நுழைவு தேர்வு எழுதிய நிலையில் அதில் 78 ஆயிரத்து 693 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.














