நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்த கனமழையின் காரணமாக நெல்லை - திருச்செந்தூர் ரயில்வே தண்டவாளம் கடும் பாதிப்படைந்தது.
தென்மாவட்டங்களில் பெய்த கனமழை ஏராளமான பகுதிகள் பாதிப்படைந்தன. குறிப்பாக ஸ்ரீவைகுண்டம், ஏரல் உள்ளிட்ட பெரும் பகுதிகள் அதிகளவு பாதிக்கப்பட்டது. மேலும் இதனால் நெல்லை - திருச்சந்தூர் ரயில்வே தண்டவாளம் ஜல்லி கற்கள் அரித்து செல்லப்பட்டு கடும் சேதமடைந்தது. ரயில்வே தண்டவாளம் சேதமடைந்த காரணத்தினால் அனைத்து எக்ஸ்பிரஸ் மற்றும் பாசஞ்சர் ரயில்களும் நாளை வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சீரமைப்பு பணிகள் இன்னும் நிறைவடையாத காரணத்தினால் இந்த ரயில்கள் ரத்து வரும் ஐந்தாம் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.