இந்தியாவைச் சேர்ந்த 16 மருந்து நிறுவனங்களின் தயாரிப்புகள், நேபாளத்தில் தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன. உலக சுகாதார மையத்தின் விதிமுறைகளின் படி, முறையாக உற்பத்தி நெறிமுறைகள் கடைபிடிக்கப்படாததால் இவை தடை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில், காம்பியா நாட்டில், இந்திய நிறுவனத்தின் இருமல் மருந்து காரணமாக பல குழந்தைகள் இறந்ததைத் தொடர்ந்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நேபாளத்தில் தடை செய்யப்பட்டுள்ள 16 மருந்து நிறுவனங்களுள், யோகா குரு ராம்தேவ்-ன் பதஞ்சலி குழுமத்தை சேர்ந்த திவ்யா பார்மசி நிறுவனமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. நேபாளம் தடை செய்துள்ள பிற நிறுவனங்களின் பட்டியல் வருமாறு: ரேடியன்ட் பேரன்டெரல்ஸ், மெர்குரி லெபாரட்டரீஸ், அலையன்ஸ் பயோடெக், கேப்டப் பயோடெக், அக்லோமெட், ஜீ லெபாரட்டரீஸ், டப்போடில்ஸ் பார்மசூட்டிக்கல்ஸ், ஜி எல் எஸ் பார்மா, யூனிஜூல்ஸ் லைப் சயின்ஸ், கான்செப்ட் பார்மசூட்டிக்கல்ஸ், ஸ்ரீ ஆனந்த் லைஃப் சென்சஸ், ஐ பி சி ஏ லெபாரட்டரீஸ், காடிலா ஹெல்த் கேர், டயல் பார்மசூட்டிக்கல்ஸ், மக்கூர் லெபாரட்டரீஸ்.