10 முறை எவரெஸ்ட் ஏறிய அயர்லாந்து மலையேற்ற வீரர் மரணம் - அன்னபூர்ணா சிகரம் ஏற்றத்தில் சோகம்

April 19, 2023

வடக்கு அயர்லாந்தை சேர்ந்த மலையேற்ற வீரர் நோயல் ஹன்னா, 10 முறை எவரெஸ்ட் சிகரத்தை ஏறி உள்ளார். தற்போது இவர் நேபாளத்தில் உள்ள இமயமலை சிகரமான அன்னபூர்ணா சிகரத்தில் ஏறி விட்டு, இறங்கும் பொழுது உயிரிழந்துள்ளார். அவரது உயிரிழப்புக்கான சரியான காரணம் தெரியவில்லை என்று சுற்றுலாத் துறை அதிகாரி தெரிவித்துள்ளார். இதே போல, அன்னபூர்ணா சிகரத்தில் ஏறிக்கொண்டிருந்த 2 இந்திய மலையேற்ற வீரர்கள் மோசமான வானிலை காரணமாக மாயமானதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. அவர்களைத் தேடும் பணி நடைபெற்று […]

வடக்கு அயர்லாந்தை சேர்ந்த மலையேற்ற வீரர் நோயல் ஹன்னா, 10 முறை எவரெஸ்ட் சிகரத்தை ஏறி உள்ளார். தற்போது இவர் நேபாளத்தில் உள்ள இமயமலை சிகரமான அன்னபூர்ணா சிகரத்தில் ஏறி விட்டு, இறங்கும் பொழுது உயிரிழந்துள்ளார். அவரது உயிரிழப்புக்கான சரியான காரணம் தெரியவில்லை என்று சுற்றுலாத் துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதே போல, அன்னபூர்ணா சிகரத்தில் ஏறிக்கொண்டிருந்த 2 இந்திய மலையேற்ற வீரர்கள் மோசமான வானிலை காரணமாக மாயமானதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. அவர்களைத் தேடும் பணி நடைபெற்று வந்தது. தற்போது, பல்ஜீத் கவுர் என்ற இந்திய மலையேற்ற வீராங்கனை உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu