நேபாளத்தில் சம பாலின திருமணம் முதல் முறையாக நேற்று பதிவு செய்யப்பட்டது.
தெற்கு ஆசியாவில் முதல் முறையாக சம பாலின திருமணங்களை அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யும் நடைமுறை நேபாளத்தில் தொடங்கப்பட்டுள்ளது. நேபாளத்தில் கடந்த 2007 ஆம் ஆண்டு சம பாலின திருமணங்களுக்கு அந்த நாட்டு உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது. பின்னர் 2015 ஆம் ஆண்டு புதிய அரசியல் அமைப்பு சட்டம் இயற்றப்பட்டது. அதில் பாலின தேர்வின் அடிப்படையில் மக்களிடையே பாகுபாடு காட்டக்கூடாது என்று கூறப்பட்டது. இந்த சூழலில் மாயா குரூப் என்ற திருநங்கைக்கும் சுரேந்திர பாண்டே என்ற சம பாலின சேர்க்கையாளருக்கும் இடையே நடந்த திருமணத்தை சட்டபூர்வமாக பதிவு செய்ய அதிகாரிகள் மறுத்துவிட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் கடந்த ஜூன் மாதம் சம பாலின திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் கொடுத்து விட்டது. அதன் தொடர்ச்சியாக இவர்களது திருமணம் நேற்று பதிவு செய்யப்பட்டது.