எவரெஸ்ட் சிகரம் ஏற செப்டம்பரிலிருந்து நவம்பர் வரை ரூ.6.48 லட்சம், டிசம்பர் முதல் பிப்ரவரி வரை ரூ.3.02 லட்சம் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
உலகின் உயரமான எவரெஸ்ட் சிகரம் 8,848.86 மீட்டர் உயரம் கொண்டது. பலர் இந்த சிகரத்தை ஏறி சாதனை படைத்துள்ளனர். ஏறுவதற்கான ராயல்டி கட்டணம் நேபாள அரசால் வசூலிக்கப்படுகிறது. இது 2015ம் ஆண்டில் திருத்தப்பட்டது. ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பல மலையேற்ற வீரர்கள் நேபாளம் வழியாக எவரெஸ்ட் சிகரத்தை ஏறுகின்றனர். இந்த சீசனில், ஏற்கனவே ரூ.9.51 லட்சம் கட்டணம் இருந்தது. ஆனால் தற்போது ரூ.12.96 லட்சம் ஆக உயர்ந்து 36% அதிகரித்துள்ளது. செப்டம்பரிலிருந்து நவம்பர் வரை ரூ.6.48 லட்சம், டிசம்பர் முதல் பிப்ரவரி வரை ரூ.3.02 லட்சம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நேபாள அமைச்சரவை இந்த உயர்வை ஒப்புதல் அளித்துள்ளதுடன், அது வரும் செப்டம்பர் 1 முதல் அமலுக்கு வரும் என சுற்றுலா வாரிய இயக்குனர் ஆரத்தி நியூபேன் தெரிவித்தார்.