நேபாளம் - துணை பிரதமர் ரவி லாமிச்சானே ராஜினாமா

January 28, 2023

நேபாள நாட்டின் துணை பிரதமர் ரவி லாமிச்சானே, நாடாளுமன்றத் தேர்தலில் சமர்ப்பித்த குடியுரிமை சான்றிதழ் செல்லாது என்று உச்ச நீதிமன்ற தீர்ப்பு வெளியாகி உள்ளது. எனவே, அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் நேபாளத்தின் உள்துறை அமைச்சராகவும் பதவி வகித்து வந்ததால், தனது அனைத்து பதவிகளில் இருந்தும் விலகுவதாக கூறியுள்ளார். ரவி லாமிச்சானே, அமெரிக்க குடியுரிமை பெற்று பல ஆண்டுகள் அங்கே வசித்து வந்தார். கடந்த 2014 ஆம் ஆண்டு, சொந்த நாட்டுக்கு திரும்பிய அவர், […]

நேபாள நாட்டின் துணை பிரதமர் ரவி லாமிச்சானே, நாடாளுமன்றத் தேர்தலில் சமர்ப்பித்த குடியுரிமை சான்றிதழ் செல்லாது என்று உச்ச நீதிமன்ற தீர்ப்பு வெளியாகி உள்ளது. எனவே, அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் நேபாளத்தின் உள்துறை அமைச்சராகவும் பதவி வகித்து வந்ததால், தனது அனைத்து பதவிகளில் இருந்தும் விலகுவதாக கூறியுள்ளார்.

ரவி லாமிச்சானே, அமெரிக்க குடியுரிமை பெற்று பல ஆண்டுகள் அங்கே வசித்து வந்தார். கடந்த 2014 ஆம் ஆண்டு, சொந்த நாட்டுக்கு திரும்பிய அவர், புதிய கட்சி தொடங்கி, கடந்த ஆண்டு தேர்தலில் களம் கண்டார். அவரது கட்சி 20 இடங்களை கைப்பற்றி 4வது பெரிய கட்சியாக உருவானது. மேலும், ஆளும் கூட்டணி கட்சியின் பங்காக உள்ளது. இந்நிலையில், 2018 ல், அமெரிக்க குடியுரிமையை கைவிட்ட அவர், நேபாள குடியுரிமையை பெறுவதற்கு முறையாக விண்ணப்பிக்கவில்லை என்று தெரியவந்துள்ளது. அதன் காரணமாக, தொடரப்பட்ட வழக்கில், தீர்ப்பு அவருக்கு எதிராக வந்துள்ளதால், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu