இந்தியாவிலிருந்து கூடுதல் சர்க்கரை இறக்குமதி - நேபாளம் திட்டம்

September 15, 2023

இந்தியாவிலிருந்து சர்க்கரை இறக்குமதி செய்யும் முக்கிய நாடாக நேபாளம் இருக்கிறது. இந்த நிலையில், வரவிருக்கும் விழாக்காலத்தை கருத்தில் கொண்டு, கூடுதல் சர்க்கரை இறக்குமதியில் ஈடுபட நேபாளம் திட்டமிட்டுள்ளது. நேபாள நாட்டின் 79% சர்க்கரைத் தேவை இந்திய இறக்குமதிலிருந்து பூர்த்தி செய்யப்படுகிறது. ஆண்டொன்றுக்கு, சராசரியாக 20 கோடி கிலோவுக்கும் அதிகமாக சர்க்கரை இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அடுத்தடுத்த மாதங்களில் வரிசையாக பண்டிகைகள் வர உள்ளதால், நேபாளத்தின் சர்க்கரைத் தேவையை பூர்த்தி செய்ய 6 கோடி கிலோ […]

இந்தியாவிலிருந்து சர்க்கரை இறக்குமதி செய்யும் முக்கிய நாடாக நேபாளம் இருக்கிறது. இந்த நிலையில், வரவிருக்கும் விழாக்காலத்தை கருத்தில் கொண்டு, கூடுதல் சர்க்கரை இறக்குமதியில் ஈடுபட நேபாளம் திட்டமிட்டுள்ளது.
நேபாள நாட்டின் 79% சர்க்கரைத் தேவை இந்திய இறக்குமதிலிருந்து பூர்த்தி செய்யப்படுகிறது. ஆண்டொன்றுக்கு, சராசரியாக 20 கோடி கிலோவுக்கும் அதிகமாக சர்க்கரை இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அடுத்தடுத்த மாதங்களில் வரிசையாக பண்டிகைகள் வர உள்ளதால், நேபாளத்தின் சர்க்கரைத் தேவையை பூர்த்தி செய்ய 6 கோடி கிலோ சர்க்கரை கூடுதலாக தேவை என கணிக்கப்பட்டுள்ளது. அதனை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்ய நேபாளம் திட்டமிட்டுள்ளது. அதன்படி, 2 கோடி கிலோ சர்க்கரையை இந்தியாவிடம் இருந்து கூடுதலாக இறக்குமதி செய்ய நேபாள நிதி அமைச்சகம் அரசுக்கு அனுமதி வழங்கி உள்ளது. மேலும், இந்திய இறக்குமதி சர்க்கரைக்கு உள்ள 50% சலுகையை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu