அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவுக்கு மின்சாரம் வழங்க நேபாள நாட்டுடன் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. கிட்டத்தட்ட 10,000 மெகாவாட் மின்சாரத்தை நேபாளம் இந்தியாவுக்கு வழங்க உள்ளது. நேபாளத்தின் எரிசக்தி, நீர்வளம் மற்றும் வேளாண் துறை அமைச்சர் சக்தி பகதூர் பாசினட் முன்னிலையில், இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்தியா சார்பில், எரிசக்தி துறை செயலாளர் பங்கஜ் அகர்வால் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.
கடந்த ஜூன் மாதத்தில், நேபாள பிரதமர் இந்தியா வருகை தந்திருந்தார். அப்போது, இந்தியாவுக்கு மின்சாரம் வழங்குவது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதன் அடிப்படையில், இந்த நீண்ட கால ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம், இந்தியா - நேபாளம் இடையிலான உறவு மேலும் வலிமை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.