நேபால் ஹெலிகாப்டர் விபத்து - 5 மெக்சிகர்கள் உயிரிழப்பு

July 11, 2023

நேபாளில், மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த 5 சுற்றுலா பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகியுள்ளது. எவரெஸ்ட் சிகரம் அருகில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியானதை அடுத்து, அங்கு தேடுதல் பணிகள் நடைபெற்றன. அதில் 5 மெக்சிகோ நாட்டினர் மற்றும் விமானி ஆகிய 6 பேரின் உடல்களும் கிடைக்கப்பெற்றுள்ளன. மனங் ஏர் நிறுவனத்தால் இந்த ஹெலிகாப்டர் இயக்கப்பட்டுள்ளது. எவரெஸ்ட் சிகரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை சுற்றிப் பார்த்துவிட்டு காத்மாண்டுவுக்கு இன்று காலை ஹெலிகாப்டர் வந்தடைய வேண்டும். […]

நேபாளில், மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த 5 சுற்றுலா பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகியுள்ளது. எவரெஸ்ட் சிகரம் அருகில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியானதை அடுத்து, அங்கு தேடுதல் பணிகள் நடைபெற்றன. அதில் 5 மெக்சிகோ நாட்டினர் மற்றும் விமானி ஆகிய 6 பேரின் உடல்களும் கிடைக்கப்பெற்றுள்ளன.

மனங் ஏர் நிறுவனத்தால் இந்த ஹெலிகாப்டர் இயக்கப்பட்டுள்ளது. எவரெஸ்ட் சிகரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை சுற்றிப் பார்த்துவிட்டு காத்மாண்டுவுக்கு இன்று காலை ஹெலிகாப்டர் வந்தடைய வேண்டும். ஆனால், மோசமான வானிலை காரணமாக வேறு வழித்தடத்தில் ஹெலிகாப்டர் சென்றதாகவும், மோசமான வானிலை காரணமாகவே விபத்து ஏற்பட்டு இருக்க வேண்டும் எனவும் கூறப்படுகிறது. உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu