நேபாளத்தின் சபாநாயகராக கம்யூனிஸ்ட் கட்சியின் தேவ் ராஜ் கிமிறே தேர்வு

January 19, 2023

நேபாள சட்டமன்றத்தின் சபாநாயகரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் இன்று நடைபெற்றது. இதில் 167 வாக்குகளைப் பெற்று, கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தேவ் ராஜ் கிமிறே சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நேபாளத்தின் கீழவையில் மொத்தம் 275 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் பெரும்பான்மையைப் பெற 138 வாக்குகளைப் பெற வேண்டும். இதில் தேவ் ராஜ் கிமிறேவுக்கு ஆதரவாக 167 பேரும், எதிராக 100 பேரும் வாக்களித்துள்ளனர். அவரை எதிர்த்து நேபாள காங்கிரசைச் சேர்ந்த ஈஸ்வரி நூபனி போட்டியிட்டார். வாக்கெடுப்பை தலைமை ஏற்று நடத்திய […]

நேபாள சட்டமன்றத்தின் சபாநாயகரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் இன்று நடைபெற்றது. இதில் 167 வாக்குகளைப் பெற்று, கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தேவ் ராஜ் கிமிறே சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

நேபாளத்தின் கீழவையில் மொத்தம் 275 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் பெரும்பான்மையைப் பெற 138 வாக்குகளைப் பெற வேண்டும். இதில் தேவ் ராஜ் கிமிறேவுக்கு ஆதரவாக 167 பேரும், எதிராக 100 பேரும் வாக்களித்துள்ளனர். அவரை எதிர்த்து நேபாள காங்கிரசைச் சேர்ந்த ஈஸ்வரி நூபனி போட்டியிட்டார். வாக்கெடுப்பை தலைமை ஏற்று நடத்திய சபாநாயகர் பசுபதி சும்சேர் ராணா, தேர்தல் முடிவுகளை அறிவித்தார். மேலும், துணை சபாநாயகருக்கான வாக்கெடுப்பு, வரும் ஜனவரி 23ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu