நெஸ்ட்லே காலாண்டு முடிவுகள் வெளியீடு - நிகர லாபம் 27% உயர்வு

April 25, 2024

உணவு தயாரிப்பு துறையில் முன்னணியில் உள்ள நெஸ்ட்லே நிறுவனத்தின் நான்காம் காலாண்டு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, நிறுவனத்தின் தனிப்பட்ட லாபம் 27% உயர்ந்து 934 கோடி ரூபாயாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன், நெஸ்ட்லே நிறுவனத்தின் வருவாய் 9% உயர்ந்து 5268 கோடி ரூபாயாக பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, 2024 ஆம் நிதி ஆண்டுக்கு 8.5 ரூபாய் டிவிடெண்ட் ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. பேக் செய்யப்பட்ட பொருட்களை அதிகமாக விற்பனை செய்யும் நெஸ்லே நிறுவனம், அண்மையில் மீண்டும் ஒரு சர்ச்சையில் […]

உணவு தயாரிப்பு துறையில் முன்னணியில் உள்ள நெஸ்ட்லே நிறுவனத்தின் நான்காம் காலாண்டு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, நிறுவனத்தின் தனிப்பட்ட லாபம் 27% உயர்ந்து 934 கோடி ரூபாயாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன், நெஸ்ட்லே நிறுவனத்தின் வருவாய் 9% உயர்ந்து 5268 கோடி ரூபாயாக பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, 2024 ஆம் நிதி ஆண்டுக்கு 8.5 ரூபாய் டிவிடெண்ட் ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.

பேக் செய்யப்பட்ட பொருட்களை அதிகமாக விற்பனை செய்யும் நெஸ்லே நிறுவனம், அண்மையில் மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியது. எனினும், நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் சாதகமாக அமைந்துள்ளது. நிபுணர்களின் கணிப்புகளை மீறி, அதிக லாபம் மற்றும் வருவாய் பதிவாகியுள்ளது. நெஸ்லே நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு தொடர்ந்து தேவை மற்றும் வரவேற்பு இருந்து வருவதாக சந்தை நிலவரங்கள் தெரிவிக்கின்றன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu