நெஸ்லே இந்தியா லாபம் 66% உயர்வு

February 16, 2023

பிரபல உணவுப் பொருள் வர்த்தக நிறுவனமான நெஸ்லே, தனது 4ம் காலாண்டு நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, நிறுவனத்தின் நிகர லாபம் வருடாந்திர அடிப்படையில் 66% உயர்ந்து, 628 கோடியாக பதிவாகியுள்ளது. நெஸ்லே நிறுவனம், ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான நிதியாண்டு முறையை கடைப்பிடித்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த நிறுவனம் ,கடந்த 2022 ம் ஆண்டுக்கு, டிவிடெண்ட் தொகையாக ஒரு பங்குக்கு 75 ரூபாய் நிர்ணயித்துள்ளது. நிறுவனம் வெளியிட்டுள்ள காலாண்டு அறிக்கையின் படி, நிறுவனத்தின் விற்பனை […]

பிரபல உணவுப் பொருள் வர்த்தக நிறுவனமான நெஸ்லே, தனது 4ம் காலாண்டு நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, நிறுவனத்தின் நிகர லாபம் வருடாந்திர அடிப்படையில் 66% உயர்ந்து, 628 கோடியாக பதிவாகியுள்ளது. நெஸ்லே நிறுவனம், ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான நிதியாண்டு முறையை கடைப்பிடித்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த நிறுவனம் ,கடந்த 2022 ம் ஆண்டுக்கு, டிவிடெண்ட் தொகையாக ஒரு பங்குக்கு 75 ரூபாய் நிர்ணயித்துள்ளது.

நிறுவனம் வெளியிட்டுள்ள காலாண்டு அறிக்கையின் படி, நிறுவனத்தின் விற்பனை 14% உயர்ந்து, 4233 கோடியாக பதிவாகியுள்ளது. குறிப்பாக, நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனை 14.8% உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏற்றுமதி விற்பனை 17% உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நிறுவனத்தின் இயக்க வருவாய் 14% உயர்ந்து, 4257 கோடியாக பதிவாகியுள்ளது. அத்துடன், நிறுவனத்தின் EBITDA மதிப்பு 973 கோடியாக பதிவாகியுள்ளது. ஒட்டுமொத்தமாக, கடந்த 2022 ஆம் ஆண்டை பொறுத்தவரை, நிறுவனத்தின் நிகர லாபம் 2390 கோடியாகவும், நிகர விற்பனை மதிப்பு 16970 கோடியாகவும் பதிவாகியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu