இஸ்ரேலில் ஜோ பைடன் நெதன்யாகு சந்திப்பு

October 18, 2023

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் நடைபெற்று வரும் நெருக்கடியான சூழலில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேல் சென்றுள்ளார். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை அவர் இன்று நேரில் சந்தித்து பேசினார். அமெரிக்கா, தொடர்ந்து இஸ்ரேலுக்கு துணையாக இருக்கும் என்பதை அவர் வலியுறுத்தினார். மிகவும் முக்கியம் வாய்ந்த இந்த சந்திப்புக்குப் பிறகு, இருவரும் சேர்ந்து செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, “நாகரிக சக்திகளுக்கும் காட்டுமிராண்டி தனத்திற்கும் இடையிலான போர் இது” என நெதன்யாகு குறிப்பிட்டார். அத்துடன், இஸ்ரேலுக்கு […]

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் நடைபெற்று வரும் நெருக்கடியான சூழலில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேல் சென்றுள்ளார். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை அவர் இன்று நேரில் சந்தித்து பேசினார். அமெரிக்கா, தொடர்ந்து இஸ்ரேலுக்கு துணையாக இருக்கும் என்பதை அவர் வலியுறுத்தினார்.
மிகவும் முக்கியம் வாய்ந்த இந்த சந்திப்புக்குப் பிறகு, இருவரும் சேர்ந்து செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, “நாகரிக சக்திகளுக்கும் காட்டுமிராண்டி தனத்திற்கும் இடையிலான போர் இது” என நெதன்யாகு குறிப்பிட்டார். அத்துடன், இஸ்ரேலுக்கு ஆதரவாக அணிதிரளுமாறு உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்தார். தொடர்ந்து, காசா மருத்துவமனையில் நடத்தப்பட்ட வன்முறை தாக்குதலில் 500 ககும் மேற்பட்டோர் உயிரிழந்தது குறித்து ஜோ பைடன் வருத்தம் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், “இந்த கொடூரமான தாக்குதலை இஸ்ரேல் நிகழ்த்தவில்லை; வேறு ஏதோ இயக்கத்தினர் நடத்தி உள்ளதாக கூறினார். இஸ்ரேலும், மருத்துவமனை மீது நடத்தப்பட்ட மனிதாபிமானமற்ற தாக்குதலை தாங்கள் நடத்தவில்லை என மறுப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu