நெட்பிளிக்ஸ் நிறுவனம் குறைந்த கட்டணத்தில் விளம்பரத்துடன் கூடிய சேவையை அறிமுகம் செய்திருந்தது. தற்போது, இந்த சேவையில் 15 மில்லியன் பயனர்கள் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெட்பிளிக்ஸ் நிறுவனத்தின் விளம்பரத்துடன் கூடிய சேவைக்கு, அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. எனவே, இந்த சேவையில் புதிய அம்சங்களை நெட்பிளிக்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. அமெரிக்காவில், மாதத்திற்கு 7 டாலர் கட்டணத்தில் உள்ள விளம்பரத்துடன் கூடிய நெட்பிளிக்ஸ் சேவை, சாதாரண நெட்பிளிக்ஸ் சந்தா திட்டத்தை விட பாதிக்கும் கீழான கட்டணத்தை கொண்டுள்ளதாகும். தற்போது, இந்த திட்டத்தில் உள்ளவர்கள், திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அத்துடன், ஒரே நேரத்தில் 2 பேர் ஒளிபரப்புகளை பார்க்கலாம் என நெட்பிளிக்ஸ் சொல்லப்பட்டுள்ளது. அத்துடன், பயனர்கள் தாங்கள் பார்க்கும் முதல் 3 அல்லது 4 தொடர்களுக்கு விளம்பரம் இல்லா சேவையை பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.