நெட்ப்ளிக்ஸ் இணை நிறுவனர் ரீட் ஹேஸ்டிங்ஸ் ராஜினாமா

January 20, 2023

நெட்ப்ளிக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனரான ரீட் ஹேஸ்டிங்ஸ், தனது பதவியில் இருந்து விலகி உள்ளார். அவர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாகவும் பதவி வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நிறுவனத்தில் பணியாற்றி வந்த அவர், நெட்ப்ளிக்ஸ் சந்தாதாரர் எண்ணிக்கை உயர்ந்து வரும் வேளையில் ராஜினாமா செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவருக்கு பின், அவர் வகித்து வந்த பொறுப்புகளை, டெட் சரண்டாஸ் மற்றும் கிரேக் பீட்டர்ஸ் ஆகியோர் தலைமை ஏற்று நடத்துவர் […]

நெட்ப்ளிக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனரான ரீட் ஹேஸ்டிங்ஸ், தனது பதவியில் இருந்து விலகி உள்ளார். அவர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாகவும் பதவி வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நிறுவனத்தில் பணியாற்றி வந்த அவர், நெட்ப்ளிக்ஸ் சந்தாதாரர் எண்ணிக்கை உயர்ந்து வரும் வேளையில் ராஜினாமா செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவருக்கு பின், அவர் வகித்து வந்த பொறுப்புகளை, டெட் சரண்டாஸ் மற்றும் கிரேக் பீட்டர்ஸ் ஆகியோர் தலைமை ஏற்று நடத்துவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டின் ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையில், 20000 சந்தாதாரர்கள் வரை நிறுவனம் இழந்தது. இது அடுத்த மூன்று மாதங்களில் 10 லட்சமாக உயர்ந்தது. நிறுவனத்தின் பங்கு மதிப்பு பெரும் சரிவை சந்தித்தது. அதன் பின்னர், சந்தாதாரர் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில், பல்வேறு புதிய திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. அதன் பின்னர், டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த கடந்த காலாண்டில், நெட்ப்ளிக்ஸ் சந்தாதாரர் எண்ணிக்கை 7.5 மில்லியனைத் தாண்டி உள்ளது. மேலும், நெட்பிளிக்ஸ் நிறுவனத்தின் வருவாய் வளர்ச்சி 4% வரை இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu