நெட்ப்ளிக்ஸ் சந்தா கட்டணம் உயர்வாக இருப்பதாக கருதப்படுவதால், நிறைய பேர் தங்கள் நண்பர்களுக்குள் பாஸ்வேர்டு களை பகிர்ந்து வந்தனர். அதனை கட்டுப்படுத்தும் நோக்கில், நெட்ப்ளிக்ஸ் நிறுவனம், பாஸ்வேர்டு களை ஷேர் செய்வதற்கான அம்சத்தை நிறுத்தியது. தொடர்ந்து, வளர்ச்சிக்கான மாற்று வழிகளை கொண்டு வரும் நோக்கில், இந்தியா உள்ளிட்ட 116 நாடுகளில் நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் தனது கட்டணத்தை குறைத்து அறிவித்துள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டு, இந்தியாவில் 20% முதல் 60% வரை நெட்ப்ளிக்ஸ் சந்தா கட்டணம் குறைக்கப்பட்டது. இந்த நடவடிக்கைக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து, 116 நாடுகளில் விலைகள் குறைக்கப்பட்டன. இந்த 116 நாடுகளின் பயன்பாடு, மொத்த நெட்ப்ளிக்ஸ் பயன்பாட்டில் 5% மட்டுமே. ஆனால், நீண்ட கால அடிப்படையில் வருவாய் வளர்ச்சி ஏற்படும் என நெட்ப்ளிக்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளது. கட்டணம் குறைக்கப்பட்டதால், 2022 ஆம் ஆண்டில், 30% பயன்பாடு வளர்ச்சியையும், 24% வருவாய் வளர்ச்சியையும் நெட்ப்ளிக்ஸ் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.