மலிவு விலையில், விளம்பரங்களுடன் கூடிய புதிய சந்தா திட்டம் அறிமுகம் - நெட்பிளிக்ஸ் அறிவிப்பு

November 5, 2022

இணையம் வாயிலாக வீடியோக்களை ஸ்ட்ரீமிங் செய்யும் நெட்பிளிக்ஸ் நிறுவனம், மலிவு விலையில், விளம்பரங்களுடன் கூடிய அடிப்படை சந்தா திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய சந்தா திட்டம், உலகின் 12 நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மாதத்திற்கு 6.99 டாலர்கள் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தற்போதைய நிலையில், ஏற்கனவே உள்ள நெட்பிளிக்ஸ் அடிப்படை சந்தாவில், மாதத்திற்கு 9.99 டாலர்கள் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அத்துடன், ஏற்கனவே உள்ள அடிப்படை சந்தா திட்டம், விளம்பரங்கள் இல்லாத திட்டமாக மேம்படுத்தப்பட்டுள்ளது […]

இணையம் வாயிலாக வீடியோக்களை ஸ்ட்ரீமிங் செய்யும் நெட்பிளிக்ஸ் நிறுவனம், மலிவு விலையில், விளம்பரங்களுடன் கூடிய அடிப்படை சந்தா திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய சந்தா திட்டம், உலகின் 12 நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மாதத்திற்கு 6.99 டாலர்கள் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தற்போதைய நிலையில், ஏற்கனவே உள்ள நெட்பிளிக்ஸ் அடிப்படை சந்தாவில், மாதத்திற்கு 9.99 டாலர்கள் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அத்துடன், ஏற்கனவே உள்ள அடிப்படை சந்தா திட்டம், விளம்பரங்கள் இல்லாத திட்டமாக மேம்படுத்தப்பட்டுள்ளது என்ற அறிவிப்பும் வெளிவந்துள்ளது.

இந்த புதிய அடிப்படை சந்தா திட்டத்தில், ஒரு மணி நேரத்தில், 4 முதல் 5 நிமிடங்களுக்கு விளம்பரங்கள் ஒளிபரப்பப்படும். அத்துடன், ஒவ்வொரு வீடியோவும் தொடங்குவதற்கு முன்னர், 30 வினாடிகளுக்கான விளம்பரங்கள் ஒளிபரப்பாகும். வீடியோக்களை பதிவிறக்கம் செய்ய முடியாது. அத்துடன், குறைந்த எண்ணிக்கையிலான திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மட்டுமே ஒளிபரப்பு செய்யப்படும். இந்த புதிய சந்தா திட்டம், பிரான்ஸ், பிரிட்டன், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, இத்தாலி, ஜப்பான், அமெரிக்கா, கொரியா, மெக்ஸிகோ மற்றும் ஸ்பெயின் நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் பிற நாடுகளுக்கும் அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu