நெட்பிளிக்ஸ் சந்தா கட்டணம் 50% குறைப்பு

February 24, 2023

நெட்பிளிக்ஸ் நிறுவனம் தனது அடிப்படை சந்தா திட்டத்திற்கான கட்டணத்தை 50% குறைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதுமட்டுமல்லாது, பிற சந்தா திட்டங்களின் கட்டணங்களும் 17 முதல் 25% வரை குறைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. உலகளாவிய முறையில், கிட்டத்தட்ட 100 நாடுகளில் இந்த விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சந்தாதாரர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள, குறைந்த வருவாய் உள்ள பகுதிகளில் இது அமல்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது. நெட்பிளிக்ஸ் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு மூலம், வியட்நாம், இந்தோனேசியா, தாய்லாந்து, […]

நெட்பிளிக்ஸ் நிறுவனம் தனது அடிப்படை சந்தா திட்டத்திற்கான கட்டணத்தை 50% குறைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதுமட்டுமல்லாது, பிற சந்தா திட்டங்களின் கட்டணங்களும் 17 முதல் 25% வரை குறைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. உலகளாவிய முறையில், கிட்டத்தட்ட 100 நாடுகளில் இந்த விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சந்தாதாரர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள, குறைந்த வருவாய் உள்ள பகுதிகளில் இது அமல்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.

நெட்பிளிக்ஸ் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு மூலம், வியட்நாம், இந்தோனேசியா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் உள்ள 10 மில்லியனுக்கும் மேற்பட்ட சந்தாதாரர்கள் பயனடைவர் என்று சொல்லப்பட்டுள்ளது. ஏற்கனவே, இந்தியா உள்ளிட்ட சில தெற்காசிய நாடுகளில், சந்தாதாரர் எண்ணிக்கையை அதிகரிக்கும் பொருட்டு, நெட்பிளிக்ஸ் நிறுவனம், சந்தா கட்டணத்தை குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நியூயார்க்கில் நெட்பிளிக்ஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 5.2% சரிந்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu