சரிந்த பொருளாதாரம் - ரெசஷன் பாதிப்பில் நெதர்லாந்து

August 17, 2023

தொடர்ந்து 2வது காலாண்டாக நெதர்லாந்து நாட்டின் பொருளாதாரம் சரிவடைந்துள்ளது. இதன் காரணமாக, ரெசஷன் பாதிப்புக்குள் நெதர்லாந்து விழுந்துள்ளதாக அந்நாட்டின் புள்ளியியல் அமைப்பு தெரிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 0.4% சரிவை நெதர்லாந்து பொருளாதாரம் பதிவு செய்தது. அதை தொடர்ந்து, கடந்த காலாண்டில், 0.3% சரிவு பதிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, வீட்டிற்கு தேவையான மர சாமான்கள் மற்றும் துணிமணிகள் வாங்குவதில் நெதர்லாந்து மக்களிடையே ஆர்வம் குறைந்துள்ளது. அதே வேளையில், இதர துறைகளில் ஆடம்பர செலவுகள் பதிவாகியுள்ளன. […]

தொடர்ந்து 2வது காலாண்டாக நெதர்லாந்து நாட்டின் பொருளாதாரம் சரிவடைந்துள்ளது. இதன் காரணமாக, ரெசஷன் பாதிப்புக்குள் நெதர்லாந்து விழுந்துள்ளதாக அந்நாட்டின் புள்ளியியல் அமைப்பு தெரிவித்துள்ளது.

2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 0.4% சரிவை நெதர்லாந்து பொருளாதாரம் பதிவு செய்தது. அதை தொடர்ந்து, கடந்த காலாண்டில், 0.3% சரிவு பதிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, வீட்டிற்கு தேவையான மர சாமான்கள் மற்றும் துணிமணிகள் வாங்குவதில் நெதர்லாந்து மக்களிடையே ஆர்வம் குறைந்துள்ளது. அதே வேளையில், இதர துறைகளில் ஆடம்பர செலவுகள் பதிவாகியுள்ளன. இதன் காரணமாக, பொருளாதாரத்தில் சரிவு காணப்படுவதாக கூறப்படுகிறது.

முக்கியமாக, வெளிநாட்டு வர்த்தகம் நெதர்லாந்து பொருளாதார வீழ்ச்சியில் முக்கிய பங்கு வகித்துள்ளது. ஏற்றுமதியை பொறுத்தவரை, கடந்த 4 காலாண்டுகளாக தேக்கநிலை உள்ளதாக கூறப்படுகிறது. இதன் விளைவாகவே, ரெசஷன் பாதிப்புக்குள் நாடு விழுந்து உள்ளதாக நிபுணர்கள் கூறுகிறார்கள்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu