போக்குவரத்து துறை ஊழியர்கள் இன்று முதல் கட்டாயமாக பயோமெட்ரிக் முறையில் வருகையை பதிவு செய்ய வேண்டும்.
சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களும் இன்று முதல் கட்டாயமாக பயோமெட்ரிக் முறையில் வருகையை பதிவு செய்ய வேண்டும் என மேலாண் இயக்குநர் பிரபு சங்கர் அறிவித்துள்ளார்.
ஏற்கனவே 2024 ஜூலை 1ஆம் தேதியிலிருந்து இது அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அதை நடைமுறைப்படுத்துவதில் தீவிரம் காட்டப்பட்டுள்ளது. தலைமை அலுவலகம், கிளை அலுவலகங்கள், தொழிற்கூடங்களில் பணிபுரியும் டிரைவர், கண்டக்டர், தொழில்நுட்ப மற்றும் அலுவலக பணியாளர்கள் அனைவரும் இந்த முறையினை பின்பற்றவேண்டும். இன்று முதல் பயோமெட்ரிக் பதிவு செய்தவர்களின் வருகையே சட்டபூர்வமாக கருதப்படும்.














