ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு வீடியோ ரெக்கார்ட் செய்யும் வகையில் புதிய கேமரா அம்சத்தை வாட்ஸ்அப் அறிமுகம் செய்துள்ளது.
வாட்ஸ்அப் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைப் பக்கத்தில், புதிய கேமரா அம்சத்திற்கான மேம்படுத்தல் வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக, இந்த புதிய கேமரா அம்சம் பீட்டா சோதனையாளர்களுக்கு வழங்கப்பட்டது. இந்த சோதனையில், வீடியோ ரெக்கார்ட் செய்வதில், புதிய அனுபவம் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எனவே, இந்த அம்சம் தற்போது ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு வெளியிடப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் 2.23.2.73 வெர்ஷனில் இந்த புதிய கேமரா அம்சம் கொடுக்கப்பட்டுள்ளது.
பொதுவாக, வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகளில் கேமரா அம்சத்தை பயன்படுத்த அந்தந்த கைபேசியின் சொந்த கேமரா பயன்படுத்தப்படும். மேலும், அந்த செயலிகளில் வழங்கப்படும் கூடுதல் கேமரா அம்சங்களையும் பயன்படுத்தி கொள்ளலாம். அந்த வகையில், வாட்ஸ்அப் புதிய கேமரா அம்சம் வெளியிடப்பட்டுள்ளது.