தெலுங்கானாவில் கல்வி ஒப்பந்தம் முடிவடையும் நிலையில் புதிய மாற்றங்கள்

தெலுங்கானாவில் ஆந்திர மாணவர்களுக்கு தொழில்துறை படிப்புகளில் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநில பிரிவினையின் போது, இரு மாநிலங்களுக்கு இடையே 10 ஆண்டுகளுக்கான கல்வி இட ஒதுக்கீடு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தம் இந்த ஆண்டின் இறுதியில் முடிவடைகிறது. இதனால், வரவிருக்கும் கல்வியாண்டு முதல், தெலுங்கானாவில் தொழில்துறை படிப்புகளில் ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கல்வி நிறுவனங்களில் 85 சதவீத இட ஒதுக்கீடு […]

தெலுங்கானாவில் ஆந்திர மாணவர்களுக்கு தொழில்துறை படிப்புகளில் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநில பிரிவினையின் போது, இரு மாநிலங்களுக்கு இடையே 10 ஆண்டுகளுக்கான கல்வி இட ஒதுக்கீடு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தம் இந்த ஆண்டின் இறுதியில் முடிவடைகிறது. இதனால், வரவிருக்கும் கல்வியாண்டு முதல், தெலுங்கானாவில் தொழில்துறை படிப்புகளில் ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டுள்ளது.

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கல்வி நிறுவனங்களில் 85 சதவீத இட ஒதுக்கீடு தெலுங்கானா மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது, அதேவேளை, மீதமுள்ள 15 சதவீத இட ஒதுக்கீடு வெளி மாநிலத்தை சேர்ந்த மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த மாற்றத்தின் மூலம், ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த மாணவர்கள் தெலுங்கானா கல்வி நிறுவனங்களில் இனி இட ஒதுக்கீட்டில் சேர்ந்து படிக்க முடியாது என்பது தெளிவாகி உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu