தேவேந்திர பட்னாவிஸ் மகாராஷ்டிரா முதலமைச்சராக பதவியேற்றார்
மகாராஷ்டிராவில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்தது. ஏக்நாத் ஷிண்டே மற்றும் தேவேந்திர பட்னாவிஸின் இடையிலான அமைச்சரவைக்கான ஒதுக்கீடு விவகாரத்தில் இழுபறி நிலவினாலும், பாஜக பேச்சுவார்த்தை முடிவுக்கு கொண்டு வந்தது. இந்நிலையில் மும்பையில் நடைபெற்ற பாஜக எம்எல்ஏ கூட்டத்தில், தேவேந்திர பட்னாவிஸு முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதை தொடர்ந்து, அவர் மகாராஷ்டிரா முதல்வராக பதவியேற்றார். மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் அவருக்கு பதவிபிரமாணம் அளித்தார். பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, அமித் ஷா, ராஜ்நாத் சிங், ஜே.பி. நட்டா, யோகி ஆதித்யநாத் ஆகியோர் கலந்துகொண்டனர்.