சென்னையில் விமான பயணிகளுக்கு புதிய வசதி அறிமுகபடுத்தப்பட்டுள்ளது.
விமான நிலையத்தில் இருந்து மெட்ரோ ரயில் நிலையங்களில் தங்களின் உடமைகளை விமான பயணிகள் பெற்று கொள்ளும் வசதி தொடர்பாக இந்திய விமான நிலைய ஆணைய அதிகாரிகள், சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனம் மற்றும் முன்னணி விமான நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நெரிசலை குறைப்பது, விமான பயணிகளின் நேரத்தை மிச்சப்படுத்துவது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் மெட்ரோ ரயில் நிலையங்களில் இந்த வசதியை முதலில் அமல்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இதற்காக மீனம்பாக்கம் விமான நிலையத்தில் போர்டிங் பாஸ்களை பெற்று தங்களின் பொருட்களை விட்டுவிட்டு மெட்ரோ ரயில் நிலையங்களில் உடமைகளை வாங்கிக்கொள்ளும் நடைமுறை வரும் மார்ச் மாதத்தில் சோதனை அடிப்படையில் செயல்படுத்த முடிவெடுக்கப்பட்டது. இந்த வசதி வரும் ஏப்ரல் 14ம் தேதி முதல் முழுமையான பயன்பாட்டிற்கு வருகிறது என AAI அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.