ஒடிசா மற்றும் திரிபுரா மாநிலங்களுக்கு புதிய கவர்னர் நியமிக்கப்பட்டு இருப்பதாக ஜனாதிபதி திரௌபதி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
திரிபுரா கவர்னராக இந்திர சேனா ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர் .மேலும் அங்குள்ள பாஜக மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்து வந்தவர். தெலுங்கானாவில் மாநில பாஜக கட்சியின் செயலாளராக பதவி வகித்த அவர் சமீபத்தில் பா ஜா க கட்சியின் மூத்த தலைவர்களுக்கு அந்தஸ்து வழங்குவதில்லை என தெரிவித்திருந்தார்.
அதே போல் ஒடிசா கவர்னராக ராகுபத் தாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஜார்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் ஆவார். பாஜக கட்சியின் தேசிய துணைத்தலைவர்களில் ஒருவராக இருந்தவர் மேலும் 2014 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை ஜார்கண்ட் மாநிலத்தில் முதலமைச்சராகவும் பதவி வகித்தார். இவர்கள் இருவரும் விரைவில் பதவி ஏற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.