பல மாநிலங்களுக்கு புதிய கவர்னர்களை ஜனாதிபதி திரவுபதி முர்மு நியமித்துள்ளார்.
இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு பல்வேறு மாநிலங்களுக்கு புதிய கவர்னர்களை நியமித்தார். ஒடிசா கவர்னர் ரகுபர் தாஸ் ராஜினாமா செய்ததை அடுத்து, ஹரிபாபு மிசோரம் கவர்னராக இருந்தார், இவர் தற்போது ஒடிசா கவர்னராக நியமிக்கப்பட்டார். முன்னாள் ராணுவ தளபதி வி.கே.சிங் மிசோரம் கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், கேரளா கவர்னர் ஆரிப் முகமது கான் பீகார் கவர்னராக நியமிக்கப்பட்டார், பீகார் கவர்னராக இருந்த ராஜேந்திர அர்லேகர் கேரளா கவர்னராக நியமிக்கப்பட்டார். மணிப்பூர் கவர்னராக முன்னாள் உள்துறை செயலாளர் அஜய் குமார் பல்லா நியமிக்கப்பட்டுள்ளார்.