பயன்படுத்தப்பட்ட கார்களின் மீதான வரி விதிப்பில், ஜிஎஸ்டி கவுன்சில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை அறிவித்துள்ளது. இதன்படி, எலக்ட்ரிக் வாகனங்கள் (EVகள்), 1200 சிசி அல்லது 4000 மிமீ நீளமுள்ள பெட்ரோல் கார்கள் மற்றும் 1500 சிசி அல்லது 4000 மிமீ க்கு மேல் உள்ள டீசல் கார்கள் உள்ளிட்ட பயன்படுத்தப்பட்ட கார் மார்ஜின்களுக்கு 18% ஜிஎஸ்டி விதிக்கப்பட உள்ளது. அதேசமயம், சிறிய கார்களுக்கு 12% ஜிஎஸ்டி தொடர்ந்து வசூலிக்கப்படும். இந்த புதிய விதிமுறை, ஜிஎஸ்டியில் பதிவு செய்யாத தனிப்பட்ட விற்பனையாளர்களுக்கு பொருந்தாது.
வணிக நிறுவனங்களைப் பொறுத்தவரை, உள்ளீட்டு வரிக் கடன் (ITC) பெறத் தகுதியான நிறுவனங்கள் விற்பனை மதிப்பின் மீது ஜிஎஸ்டி செலுத்த வேண்டும். மற்ற நிறுவனங்கள் மார்ஜினின் மீது மட்டுமே ஜிஎஸ்டி செலுத்த வேண்டும். வாகன விற்பனையில் ஏற்படும் இழப்புகள் ஜிஎஸ்டி விலக்கு பெறும். இருப்பினும், ITC உரிமை கோரப்படாவிட்டால் மட்டுமே மார்ஜின் திட்டத்தின் பலன்களைப் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய ஜிஎஸ்டி விதிமுறை, பயன்படுத்தப்பட்ட கார் சந்தையை எவ்வாறு பாதிக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.