மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு பிறகு பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு ஏற்பட்ட பாலியல் வன்கொடுமை சம்பவத்தை தொடர்ந்து, பல்கலைக்கழக வளாகத்தில் பின்பற்ற வேண்டிய புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன:
மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களை மட்டும் வளாகத்துக்குள் அனுமதிக்க வேண்டும்.
வெளிநபர்கள் வளாகத்தில் நடைபயிற்சி செய்யக் கூடாது.
மாலை மற்றும் இரவு நேரத்தில் ரோந்து செய்யப்படும்.
வெளிநபர்கள் வாகனங்களை நிறுத்த தடை; தகவல் காவல்துறைக்கு தெரிவிக்க வேண்டும்.
கட்டுமான தொழிலாளர்கள் வேலை நேரத்திற்கு பிறகு தங்கக்கூடாது.
சிசிவி கேமராக்கள் மற்றும் மின்விளக்குகள் சரியாக செயல்படுகிறதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான கமிட்டி ஒவ்வொரு மாதமும் மாணவர்களிடம் கருத்துக்களை கேட்டறிய வேண்டும்.