சூரியனின் ரகசியங்களை அறிய ஆதித்யா எல்-1 விண்கலத்துடன் புதிய உபகரணம்

February 1, 2023

5 லட்சம் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை கொண்ட சூரியனின் கரோனா கதிர்வீச்சு பற்றிய ஆய்வில் ஆதித்ய விண்கலத்துடன் புதிய உபகரணம் இணைய உள்ளது. சூரிய குடும்பத்தின் மையத்தில் பிரகாச ஒளியுடன் சூரியன் உள்ளது. நட்சத்திரம் வகையை சேர்ந்த அதனை 8 கோள்கள் சுற்று வட்டப்பாதையில் சுற்றி வருகின்றன. இவற்றில், பூமியில் உயிரினங்கள் வாழ்வதற்கான ஆற்றலை சூரியன் வழங்கி வருகிறது. பிற கோள்களில் உயிரினங்கள் வாழக்கூடிய அமைப்புகள் காணப்படவில்லை. ஏனெனில், சூரியனின் மிக அருகே உள்ள கோள்கள் அதிக […]

5 லட்சம் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை கொண்ட சூரியனின் கரோனா கதிர்வீச்சு பற்றிய ஆய்வில் ஆதித்ய விண்கலத்துடன் புதிய உபகரணம் இணைய உள்ளது.

சூரிய குடும்பத்தின் மையத்தில் பிரகாச ஒளியுடன் சூரியன் உள்ளது. நட்சத்திரம் வகையை சேர்ந்த அதனை 8 கோள்கள் சுற்று வட்டப்பாதையில் சுற்றி வருகின்றன. இவற்றில், பூமியில் உயிரினங்கள் வாழ்வதற்கான ஆற்றலை சூரியன் வழங்கி வருகிறது. பிற கோள்களில் உயிரினங்கள் வாழக்கூடிய அமைப்புகள் காணப்படவில்லை. ஏனெனில், சூரியனின் மிக அருகே உள்ள கோள்கள் அதிக வெப்பநிலையில் உள்ளன.

தொலைதூர கோள்கள் சூரியனின் வெப்பம் கிடைக்க பெறாத நிலையில் குளிர்ச்சியுடன் உள்ளன. சூரியனின் மேற்பரப்பு வெப்பநிலை 6 ஆயிரம் டிகிரி செல்சியசாக உள்ளது. ஆனால், சூரியனின் புறஅடுக்கில் உள்ள கரோனா எனப்படும் கதிர்வீச்சுகள் லட்சக்கணக்கான டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை கொண்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu