உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையில் செயல்படும் கொலிஜியத்தில் மேலும் ஒரு நீதிபதி சேர்க்கப்பட்டுள்ளார்.
உச்ச நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி சந்திரசூட் பதவி ஏற்ற பிறகு, நேற்று முதன்முறையாக கொலிஜீயம் கூடியது. இதில் நீதிபதிகள் எஸ்கே கவுல், அப்துல்நசீர், கே.எம். ஜோசப், எம்ஆர் ஷா பங்கேற்றனர். இதனால் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியுடன் சேர்ந்து 6 பேர் கொண்ட கொலிஜியம் அமைப்பாக மாறியது.
அப்போது, ஜார்க்கண்ட் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்சய் மிஸ்ரா, ஜம்மு காஷ்மீர் தலைமை நீதிபதியாக கோடீஸ்வர்சிங், ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பங்கஜ் மிட்டல், பாட்னா தலைமை நீதிபதி சஞ்சய் கரோல், மணிப்பூர் தலைமை நீதிபதி சஞ்சய் குமார், பாட்னா உயர்நீதிமன்ற நீதிபதி அசாதுதீன் அமனதுல்லா, அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி மனோஜ் மிஸ்ரா ஆகியோரை நியமிக்க பரிந்துரை செய்யப்பட்டது.














