பூமியில் விழுந்த விண் கல்லில் இருந்து இரண்டு புதிய தாதுக்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
சோமாலியாவின் எல் அலி பகுதியில் விழுந்த விண்கல்லில் இருந்து இரும்பு தாதுவின் அடிப்படையில், 2 புதிய தாதுக்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவை பூமியில் இதுவரை அறியப்படாத தாது வகையை சேர்ந்தவை என்று ஆல்பர்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகளின் ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், இதுவரை கண்டறியப்படாத புவி வேதியியல் முறைகள் மூலம் இவை உருவாகி இருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இந்த தாதுக்களுக்கு எலாலியைட் எனவும் எல்கின்ஸ் டன்டன் எனவும் பெயரிடப்பட்டுள்ளது.
சோமாலியாவில் விழுந்த விண்கல் 17 டன் எடை கொண்டது. கடந்த 2020 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட இந்த விண்கல், இதுவரை பூமியில் கண்டெடுக்கப்பட்ட 10 பெரிய விண்கற்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளது. இந்த விண்கல் மூன்று தலைமுறைக்கு முன்னர் விழுந்ததாக எல் அலி பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.