சென்னையில் 2000 மதிப்புள்ள மாதாந்திர சலுகைப் பயண அட்டை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம், குளிர்சாதன பேருந்து உட்பட அனைத்து பேருந்துகளிலும் பயணிக்கக்கூடிய ரூபாய் 2000 மதிப்புள்ள மாதாந்திர சலுகைப் பயண அட்டையை இன்று அறிமுகப்படுத்தியது. மந்தைவெளி பேருந்து நிலையத்தில், போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் இந்த புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மாநகர் போக்குவரத்துக் கழக உயர் அதிகாரிகள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
ஏற்கனவே, ரூபாய் 1000 மதிப்பிலான (குளிர்சாதன பேருந்துகள் தவிர) மாதாந்திர பயண அட்டை நடைமுறையில் உள்ளது. புதிய அட்டை மூலம் அனைத்து வகை பேருந்துகளிலும் பயணிகள் எளிதாக செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.