தமிழகத்தில் புதிய மோட்டார் வாகன சட்டம் அமலானது: தலைக்கவசம் அணியாவிட்டால் ரூ.1000 அபராதம்

October 20, 2022

புதிய மோட்டார் வாகன சட்டத்தின்படி தலைக்கவசம் அணியாவிட்டால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. இதனால் ஏற்படும் விபத்தால் விலைமதிப்பற்ற மனித உயிர்களை உலகம் இழந்து வருகின்றது. போக்குவரத்து நெரிசலால் ஏற்படும் விபத்தை காட்டிலும் குடிபோதையில் இயக்கப்படும் வாகனங்களால் தான் விபத்துக்கள் அதிகம் நடக்கின்றது. இதனை கட்டுப்படுத்தும் விதாமாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதன்படி, விபத்தில் ஏற்படும் மரணங்களை குறைப்பதில் மருத்துவ […]

புதிய மோட்டார் வாகன சட்டத்தின்படி தலைக்கவசம் அணியாவிட்டால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. இதனால் ஏற்படும் விபத்தால் விலைமதிப்பற்ற மனித உயிர்களை உலகம் இழந்து வருகின்றது. போக்குவரத்து நெரிசலால் ஏற்படும் விபத்தை காட்டிலும் குடிபோதையில் இயக்கப்படும் வாகனங்களால் தான் விபத்துக்கள் அதிகம் நடக்கின்றது. இதனை கட்டுப்படுத்தும் விதாமாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

அதன்படி, விபத்தில் ஏற்படும் மரணங்களை குறைப்பதில் மருத்துவ அவசர ஊர்தி சேவை முக்கிய பங்கு வகுக்கிறது. எனவே மருத்துவ அவசர ஊர்தி சேவையை விரைவுப்படுத்த பல நடவடிக்கைள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சாலைகளில் மருத்துவ அவசர ஊர்தி போன்ற அவசர வாகனங்கள் செல்லும் போது வழிவிடாமல் செல்பவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கும் நடவடிக்கைக்கு தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

மேலும் புதிய மோட்டார் வாகன சட்டத்தின் படி, தலைக்கவசம் அணியாவிட்டால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும். போக்குவரத்து சிக்னலை மதிக்காமல் சாலையை கடப்பவர்களுக்கு முதல் முறை ரூ.500, 2-வது முறை 1,500 அபராதம் வசூலிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu