இனி சொகுசு கார்கள் உட்பட்ட அனைத்து வகை கார்களையும் வாடகைக்கு பயன்படுத்தலாம் என போக்குவரத்து துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் இதுவரை குறிப்பிட்ட கார் வகைகளை மட்டுமே வாடகை கார்களாக பயன்படுத்த முடியும் என்ற விதி தற்போது மாற்றப்பட்டுள்ளது. இதில் மற்ற மாநிலங்களைப் போல தமிழகத்திலும் அனைத்து வகை கார்களையும் பொது போக்குவரத்துக்கு பயன்படுத்தலாம். மேலும் சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் ஆடம்பர கார்களையும் வாடகைக்கு பயன்படுத்தி பதிவு செய்யலாம். அனைத்து வகையான கார்களையும் பொது போக்குவரத்து வாகனங்களாக பதிவு செய்து இயக்கலாம் என போக்குவரத்து துணை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.