புதுமைப்பெண் திட்டத்தில் திருநங்கைகளுக்கும் புதிய வாய்ப்பு!

தமிழ்நாடு அரசு உயர்கல்விக்கு ஊக்கமாக ரூ.1000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் திருநங்கைகளுக்கும் இப்போது புதிய வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. வழிகாட்டுதல்களை தளர்த்தி அனைத்து வழிக்கல்வியையும் ஏற்கும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டங்கள் மூலமாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கல்வி பயின்று, உயர்கல்வியில் சேரும் மாணவர்கள் ரூ.1000 உதவித்தொகை பெறுகின்றனர். இதுவரை இந்தத் தொகை, தமிழ் வழியில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை படித்திருந்தாலே மட்டுமே கிடைத்தது. தற்போது, திருநங்கைகள், […]

தமிழ்நாடு அரசு உயர்கல்விக்கு ஊக்கமாக ரூ.1000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் திருநங்கைகளுக்கும் இப்போது புதிய வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. வழிகாட்டுதல்களை தளர்த்தி அனைத்து வழிக்கல்வியையும் ஏற்கும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டங்கள் மூலமாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கல்வி பயின்று, உயர்கல்வியில் சேரும் மாணவர்கள் ரூ.1000 உதவித்தொகை பெறுகின்றனர். இதுவரை இந்தத் தொகை, தமிழ் வழியில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை படித்திருந்தாலே மட்டுமே கிடைத்தது. தற்போது, திருநங்கைகள், திருநம்பிகள் மற்றும் இடைபாலினத்தவர்கள் எந்த மொழி வழிகல்வியிலும் படித்திருந்தாலும், தங்கள் அடையாள அட்டையை கல்லூரியில் சமர்ப்பித்தால் போதுமானதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அவர்கள் UMIS இணையதளத்தில் விண்ணப்பித்து இத்தொகையை பெறலாம்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu