மத்திய அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம்

September 17, 2025

20 ஆண்டுகள் பணி முடித்த மத்திய அரசு ஊழியர்கள், விருப்ப ஓய்வு பெற்றால், புதிய விதிகளின்படி விகிதாச்சார ஓய்வூதியம் பெறலாம். மத்திய அரசு ஊழியர்களுக்கான புதிய ஓய்வூதிய விதிகளை மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்த விதிகளின்படி, தேசிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் உள்ள ஊழியர்கள் 20 ஆண்டுகள் பணி முடித்த பிறகு விருப்ப ஓய்வு பெற்றால், அவர்களுக்கு விகிதாச்சார அடிப்படையில் ஓய்வூதியம் வழங்கப்படும். இந்த சலுகை ஏற்கனவே 25 ஆண்டுகள் பணி முடித்தவர்களுக்கு மட்டுமே […]

20 ஆண்டுகள் பணி முடித்த மத்திய அரசு ஊழியர்கள், விருப்ப ஓய்வு பெற்றால், புதிய விதிகளின்படி விகிதாச்சார ஓய்வூதியம் பெறலாம்.

மத்திய அரசு ஊழியர்களுக்கான புதிய ஓய்வூதிய விதிகளை மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்த விதிகளின்படி, தேசிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் உள்ள ஊழியர்கள் 20 ஆண்டுகள் பணி முடித்த பிறகு விருப்ப ஓய்வு பெற்றால், அவர்களுக்கு விகிதாச்சார அடிப்படையில் ஓய்வூதியம் வழங்கப்படும். இந்த சலுகை ஏற்கனவே 25 ஆண்டுகள் பணி முடித்தவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. புதிய விதியின் கீழ், விருப்ப ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு, அவர்கள் பணியாற்றிய ஆண்டுகளின் அடிப்படையில் ஓய்வூதியம் கணக்கிடப்படும். ஓய்வுபெறும் நாளில் இருந்து இந்த தொகை வழங்கப்படும். மேலும், பணிக்கொடை, விடுப்பை பணமாக்குதல், குழு காப்பீட்டுத் திட்டம் போன்ற பிற சலுகைகளையும் அவர்கள் பெறலாம். ஒருவேளை, ஓய்வூதியம் பெறுவதற்கு முன் ஊழியர் இறந்துவிட்டால், அவரது கணவர் அல்லது மனைவிக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும். இந்த புதிய விதிகள் மூலம் பல ஊழியர்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu