மத்திய அரசுப் பணியாளர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம் விரைவில் அமல்

மத்திய அரசுப் பணியாளர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம் ஏப்ரல் முதல் அமலுக்கு வருகிறது. புதிய ஓய்வூதிய திட்டமான (என்.பி.எஸ்.) படி, 2004-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி அல்லது அதற்குப் பிறகு அரசுப் பணிகளில் சேர்ந்தவர்களுக்கு உறுதியான ஓய்வூதியம் கிடைக்காது. இதில், பழைய ஏற்பாட்டில் கடைசியில் பெற்ற ஊதியத்தின் 50% ஓய்வூதியாக வழங்குவது மாற்றப்பட்டது. இந்த நிலையில், ஆகஸ்டில் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டமான யு.பி.எஸ். மத்திய மந்திரி சபையின் ஒப்புதலுடன் அமலுக்கு வந்தது. குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் பணியாற்றியவர்கள், […]

மத்திய அரசுப் பணியாளர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம் ஏப்ரல் முதல் அமலுக்கு வருகிறது.

புதிய ஓய்வூதிய திட்டமான (என்.பி.எஸ்.) படி, 2004-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி அல்லது அதற்குப் பிறகு அரசுப் பணிகளில் சேர்ந்தவர்களுக்கு உறுதியான ஓய்வூதியம் கிடைக்காது. இதில், பழைய ஏற்பாட்டில் கடைசியில் பெற்ற ஊதியத்தின் 50% ஓய்வூதியாக வழங்குவது மாற்றப்பட்டது.

இந்த நிலையில், ஆகஸ்டில் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டமான யு.பி.எஸ். மத்திய மந்திரி சபையின் ஒப்புதலுடன் அமலுக்கு வந்தது. குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் பணியாற்றியவர்கள், கடைசியில் பெற்ற ஊதியத்தில் 50% ஓய்வூதியமாக பெறுவதை உறுதி செய்கிறது. மேலும், 10 ஆண்டுகள் அல்லது அதற்கும் மேலாக பணியாற்றியவர்கள் மாதாந்திர குறைந்தபட்ச ரூ.10,000 ஓய்வூதியத்தை பெறுவதாகவும் இந்தத் திட்டம் அறிவிக்கின்றது. யு.பி.எஸ். திட்டம் ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வருகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu