மகளிர் பயனாளிகளின் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் பிரத்யேக மகளிர் உதவி எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது.
மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மகளிர் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் பிரத்தியேக உதவி எண் 155370 - ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த இந்த உதவி எண் முழுக்க முழுக்க வாரத்தில் 7 நாட்களும் 24 மணி நேரமும் பெண்களால் மட்டுமே இயக்கப்படும் சேவையாகும். மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பொழுது ஏற்படும் இக்கட்டான சூழ்நிலைகளை எதிர் கொள்ள பெண் பயணிகளுக்கு தேவைப்படும் உதவி மற்றும் ஆதரவை வழங்குவதற்காக இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. இது அவசரகால பதில், தேவைப்படும்போதெல்லாம் பெண்களுக்கு சரியான நேரத்தில் உதவி கிடைப்பதை உறுதி செய்கிறது. தற்போது பிஎஸ்என்எல் நெட்வொர்க்கில் மட்டுமே இந்த சேவை செயல்படுத்தப்பட்டுள்ளது. மற்ற நெட்வொர்க்களுடன் செயல்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.