செவ்வாய்க் கோளை உயிர் வாழக்கூடியதாக மாற்றுவதற்கான புதிய முறையை சிகாகோ, நோர்த் வெஸ்டர்ன் மற்றும் சென்ட்ரல் புளோரிடா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் முன்மொழிந்துள்ளனர். செவ்வாயின் வளிமண்டலத்தில் செயற்கையாக உருவாக்கப்பட்ட தூசித் துகள்களை வெளியிடுவதன் மூலம், கோளின் வெப்பநிலையை 50 டிகிரி பாரன்ஹீட்டிற்கும் அதிகமாக உயர்த்த முடியும் என்று அவர்கள் கூறுகின்றனர். இந்த உத்தி, முந்தைய முறைகளை விட 5,000 மடங்கு சக்தி வாய்ந்தது என்று கூறுகின்றனர். அத்துடன், அணுகுண்டுகள் இல்லாமல், கதிர்வீச்சுகள் இல்லாமல் இதை செய்வதால், நுண்ணுயிர்கள் மற்றும் பயிர்களுக்கு, செவ்வாய் கிரகத்தை வாழக்கூடியதாக மாற்றும் என்கின்றனர். ஆனாலும், மனிதர்களுக்கு சுவாசிக்கக்கூடிய சூழலை இது உருவாக்காது. அத்துடன், இந்த துகள்கள் பசுமைக்குடில் விளைவை அதிகரிக்கும் மற்றும் துகள் வெளியீடு நிறுத்தப்பட்டால் அவற்றின் வெப்பமடைதல் தாக்கம் தலைகீழாக மாறும் என்று கூறுகின்றனர்.














