உச்சநீதிமன்றத்தில் வழக்குகளை பட்டியலிட புதிய நடைமுறையை செயல்படுத்தும்படி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
உச்சநீதிமன்றத்தில் ரிட், மேல்முறையீடு, இடையீட்டு மனு மற்றும் பொதுநல வழக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றன. இந்த வழக்குகளை பட்டியலிடுவதற்கான நடைமுறைகள் குறித்து புதிய அறிவிப்பை தலைமை நீதிபதி சந்திரசூட் வெளியிட்டுள்ளார். அதில், 'உச்சநீதிமன்றத்தில் திங்கள், செவ்வாய், சனிக்கிழமைகளில் பதிவு செய்யப்படும். அனைத்து வழக்குகளும், அடுத்த திங்கட்கிழமை விசாரணைக்கு பட்டியலிடப்படும்.
அதேபோல் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பதிவு செய்யப்படும். வழக்குகள் அனைத்தும் மறுவாரம் வெள்ளிக்கிழமை தானாகவே பட்டியலில் இடம்பெறும். இதுகுறித்த நடவடிக்கைகளை துரிதமாக எடுக்க வேண்டும்' என உச்சநீதிமன்ற பதிவாளருக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டள்ளார்.