ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கவுண்டரில் வாங்கிய டிக்கெட்களை ஆன்லைனிலும் ரத்து செய்யலாம் என அறிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் நேற்று பதிலளித்த ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ், ரெயில் நிலைய டிக்கெட் கவுண்ட்டர்களில் வாங்கிய டிக்கெட்டுகளை ஆன்லைன் அல்லது 139 எண்ணை அழைத்து ரத்து செய்ய முடியும் என தெரிவித்தார். மேலும், ரத்து செய்யப்பட்ட அசல் டிக்கெட்டை முன்பதிவு கவுண்ட்டரில் செலுத்தி பணத்தை திரும்ப பெற முடியும் என அவர் கூறினார்.