முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மயிலாடுதுறையில் ரூ.48 கோடியில் நிறைவு பெற்ற திட்டங்களைத் தொடங்கி வைத்து, ரூ.113.51 கோடியில் புதிய வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் வைத்தார். மொத்தம் 8 புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
மயிலாடுதுறையில் சீரான போக்குவரத்திற்கு நீடூரில் ரூ.85 கோடியில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கப்படுகிறது. குத்தாலம் வாய்க்கால் ரூ.7 கோடியில் புனரமைக்கப்படும். வெள்ளக்கோவில் பகுதிகள் ரூ.8 கோடியில் மேம்படுத்தப்படுகின்றன. பூம்புகார் துறைமுகத்தில் தூர்வாரும் பணி மேற்கொள்ளப்படும். சீர்காழியில் ரூ.5 கோடியில் புதிய நகராட்சி அலுவலகம் கட்டப்படவுள்ளது. தரங்கம்பாடி–ஆடுதுறை சாலை இருவழிச்சாலையாக ரூ.45 கோடியில் மேம்படுத்தப்படும். மேலும், சீர்காழி மற்றும் திருமுல்லைவாயல் பகுதிகளில் மேற்கூரை நீட்டிப்பு, தூர்வாரல் பணிகளுக்கான ஆய்வு, தேர் வீதிகளில் ரூ.8 கோடியில் வடிகால் வசதி என மொத்தம் 8 புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.














