ஆந்திராவில் ரூ.15,300 கோடியில் புதிய திட்டங்கள் : பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

November 12, 2022

ஆந்திராவில் ரூ.15233 கோடி மதிப்பிலான உள்கட்டமைப்பு திட்டப் பணிகளை பிரதமர் தொடங்கி வைத்தார். தென் மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, இன்று ஆந்திராவில் ரூ.15233 கோடி மதிப்பிலான உள்கட்டமைப்பு திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார். அந்நிகழ்ச்சியில், பேசிய பிரதமர் மோடி, இன்று உலகம் நெருக்கடியில் சிக்கிக் கொண்டிருக்கும்போது, 'இந்தியா பல துறைகளில் புதிய மைல்கற்களை அடைந்து வருகிறது. அரசின் அனைத்துக் கொள்கைகளும் சாமானிய மக்களின் நலனையே மையமாகக் கொண்டுள்ளன. இன்று தொடங்கப்படும் பொருளாதார வழித்தடம், ஆந்திராவில் […]

ஆந்திராவில் ரூ.15233 கோடி மதிப்பிலான உள்கட்டமைப்பு திட்டப் பணிகளை பிரதமர் தொடங்கி வைத்தார்.

தென் மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, இன்று ஆந்திராவில் ரூ.15233 கோடி மதிப்பிலான உள்கட்டமைப்பு திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார். அந்நிகழ்ச்சியில், பேசிய பிரதமர் மோடி, இன்று உலகம் நெருக்கடியில் சிக்கிக் கொண்டிருக்கும்போது, 'இந்தியா பல துறைகளில் புதிய மைல்கற்களை அடைந்து வருகிறது.

அரசின் அனைத்துக் கொள்கைகளும் சாமானிய மக்களின் நலனையே மையமாகக் கொண்டுள்ளன. இன்று தொடங்கப்படும் பொருளாதார வழித்தடம், ஆந்திராவில் வர்த்தகம் மற்றும் உற்பத்தியை அதிகரிக்கும். இந்த புதிய உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களால், ஆந்திரப் பிரதேசத்தின் கடலோரப் பகுதிகள் விரைவாக வளர்ச்சிபெறும்' என்று கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu