பொதுத்தேர்வுகளில் முறைகேடுகளை தடுக்கும் நோக்கில், அரசுத் தேர்வுகள் இயக்ககம் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. மதுரையில் 2023ம் ஆண்டு +2 தேர்வில் ஒரு மாணவரின் விடைத்தாளின் முகப்பு பக்கம் மாற்றப்பட்டதாக நடந்த முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, இனி மாணவர்களின் விடைத்தாள்கள் மற்றும் முகப்புப் பக்கங்களை இணைக்கும் பணியை தேர்வுகள் இயக்ககம் நேரடியாக மேற்கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இனிவரும் காலங்களில் மாவட்ட மையங்களில் விடைத்தாள்களின் முகப்புப் பக்க இணைப்பு செய்யப்படும். தேர்வின்போது மாணவர்களுக்கு வழங்கப்படும் விடைத்தாளில் அனைத்துப் பக்கங்களும் முறையாக இணைக்கப்பட்டிருக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.