ஜூன் மாதம் முதல் புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்படும்- தமிழக அரசு

தமிழகத்தில் ஜூன் மாதம் முதல் புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 1966 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16ஆம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள அனைவருக்கும் உணவு கிடைக்க வேண்டும் என ரேஷன் கடைகளை அப்போதைய முதலமைச்சர் பக்தவச்சலம் தொடங்கி வைத்தார். அதன் மூலம் மக்களுக்கு உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன் பின்னர் 1972 ஆம் ஆண்டு முதல் முதலமைச்சர் கருணாநிதி தமிழ்நாடு பொது விநியோக கழகத்தை தொடங்கி […]

தமிழகத்தில் ஜூன் மாதம் முதல் புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

1966 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16ஆம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள அனைவருக்கும் உணவு கிடைக்க வேண்டும் என ரேஷன் கடைகளை அப்போதைய முதலமைச்சர் பக்தவச்சலம் தொடங்கி வைத்தார். அதன் மூலம் மக்களுக்கு உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன் பின்னர் 1972 ஆம் ஆண்டு முதல் முதலமைச்சர் கருணாநிதி தமிழ்நாடு பொது விநியோக கழகத்தை தொடங்கி 1975 ஆம் ஆண்டு இறுதிக்குள் அனைவருக்கும் குடும்ப அட்டைகளை வழங்கினார். இதன் மூலம் சலுகை விலையில் மக்களுக்கு தேவையான அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டன. இந்நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் ரேஷன் கார்டுகள் அனைத்தும் ஸ்மார்ட் கார்டுகளாக மாற்றப்பட்டன. அதன் பின்னர் நாடு முழுவதும் சுமார் 4 கோடி போலி ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டன. அதனை தொடர்ந்து தற்போது முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஸ்மார்ட் கார்டு முறையில் புதிய மாற்றத்தை கொண்டு வந்தார். அதன்படி விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் புதிய ஸ்மார்ட் கார்டுகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. மேலும் கலைஞர் மகளின் உரிமை தொகை ஸ்மார்ட் கார்டுகள் அடிப்படையில் வழங்கப்பட்டு வந்தன. அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் மொத்தம்2 கோடியே 24,19,350 ஸ்மார்ட் கார்டுகள் உள்ளன. இதற்கிடையில் மகளிர் உரிமை தொகை திட்டம் செயல்பட்டு வரும் வேளையில் குடும்பத்தில் இருப்பவர்களை புதிய ஸ்மார்ட் கார்டுக்கு விண்ணப்பிக்க தொடங்கினர். இதனால் புதிய ஸ்மார்ட் கார்டுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது சுமார் 2,40,000 குடும்பங்கள் புதிய ஸ்மார்ட் கார்டுகள் கேட்டு விண்ணப்பித்துள்ளனர். எனவே அவர்களுக்கு ஜூன் மாதத்திற்குள் புதிய ஸ்மார்ட் கார்டு வழங்குவதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்து வருகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu