கூடுதல் எடை கொண்ட பாக்கெட் பொருள்களுக்கு புதிய கட்டுப்பாடு

January 2, 2024

ஒரு கிலோ, ஒரு லிட்டர், ஒரு மீட்டருக்கு அதிகமான எடை கொண்ட பாக்கெட் பொருட்களை உற்பத்தி மற்றும் இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் யூனிட் விற்பனை விலை என்ற அதிகபட்ச சில்லறை விலையுடன் ஒரு கிலோவிற்கு என்ன விலை என்பதை அச்சிட வேண்டும். பாக்கெட் செய்யப்பட்ட உணவுப் பொருட்களை உற்பத்தி மற்றும் இறக்குமதி செய்பவர்கள் அதன் விலை பட்டியலில் ஒரு கிலோ விலை அல்லது ஒரு லிட்டர் விலையும் குறிப்பிட வேண்டும் என்ற புதிய நடைமுறையை மத்திய அரசு […]

ஒரு கிலோ, ஒரு லிட்டர், ஒரு மீட்டருக்கு அதிகமான எடை கொண்ட பாக்கெட் பொருட்களை உற்பத்தி மற்றும் இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் யூனிட் விற்பனை விலை என்ற அதிகபட்ச சில்லறை விலையுடன் ஒரு கிலோவிற்கு என்ன விலை என்பதை அச்சிட வேண்டும்.

பாக்கெட் செய்யப்பட்ட உணவுப் பொருட்களை உற்பத்தி மற்றும் இறக்குமதி செய்பவர்கள் அதன் விலை பட்டியலில் ஒரு கிலோ விலை அல்லது ஒரு லிட்டர் விலையும் குறிப்பிட வேண்டும் என்ற புதிய நடைமுறையை மத்திய அரசு நேற்று முதல் அமல்படுத்தியுள்ளது. ஏற்கனவே பலமுறை இந்த நடைமுறை தள்ளி வைக்கப்பட்டு நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. அதன்படி இனி அதிக எடை கொண்ட பொருட்களை உற்பத்தி அல்லது இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் அதன் ஒரு கிலோவிற்கான விலையை யூனிட் விற்பனை விலை என்று அச்சிட செய்ய வேண்டும்.

அதேபோன்று ஒரு லிட்டருக்கு,ஒரு மீட்டர் அளவு மேல் கொண்ட பொருட்களை உற்பத்தி செய்வதற்கும் அதிகபட்ச சில்லறை விலையுடன் ஒரு யூனிட் விலை என்ன என்பதையும் குறிப்பிட வேண்டும். அதேபோன்று ஒரு கிலோவிற்கு குறைவான பாக்கெட்டுகளில் அதன் மொத்த விலையுடன் ஒரு கிராம் விற்பனை விலையும் குறிப்பிட வேண்டும். அதேபோன்று பேனா மற்றும் பென்சில்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட எண்ணிக்கையைக் கொண்ட பாக்கெட்களில் ஒரு பென்சில் அல்லது பேனாவின் யூனிட் விலையை குறிப்பிட வேண்டும். இதன் விதியை மீறும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குடிநீர், குளிர்பானம் உள்ளிட்ட 19 வகையான பொருட்கள் பேக்கேஜிங் செய்வதற்கான குறிப்பிட்ட அளவு என்ற விதிமுறைகளும் நீக்கப்பட்டுள்ளது

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu