இமாச்சல பிரதேசத்தில் உணவக உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களின் பெயர் மற்றும் முகவரிகள் காட்சிப்படுத்த வேண்டும் என்ற புதிய விதி அமலுக்கு வர உள்ளது.
இமாச்சல பிரதேசத்தில், உணவகங்களில் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களின் தகவல்களை வெளியிடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மாநில நகர்ப்புற வளர்ச்சி கூட்டத்தில், சட்டசபை சபாநாயகர் குல்தீப் சிங் பதானியா, அமைச்சர்கள் விக்ரமாதித்ய சிங் மற்றும் அனிருத் சிங் உள்ளிட்ட குழு இதனை அறிவித்தது. புதிய விதிகள், வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்குதல் உள்ளிட்டவை விரைவில் அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு, உத்தரபிரதேசத்தில் இதே மாதிரியான உத்தரவு போடப்பட்டது குறிப்பிடத்தக்கது.














