வருமானவரி, ரெயில் பயணம், கிரெடிட் கார்டு, ஏடிஎம் சேவைகள் என பல துறைகளில் முக்கிய மாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
வருமானவரி தாக்கல் முதல் ரெயில்வே டிக்கெட், கிரெடிட் கார்டு பயன்பாடு வரை பல துறைகளில் மாற்றங்கள் இன்று (ஜூலை 1) முதல் அமலில் வந்துள்ளன. புதிய பான் கார்டுக்கு ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது; ஏற்கனவே பான் உள்ளவர்களும் டிசம்பர் 31க்குள் ஆதாரை இணைக்க வேண்டும். ரெயில்வே தட்கல் டிக்கெட் முன்பதிவுக்கும் ஆதார் கட்டாயம், அதோடு இரட்டை அங்கீகாரம் (OTP உள்ளிட்டது) நடைமுறைக்கு வருகிறது. வருமானவரி தாக்கலுக்கான கடைசி தேதி செப்டம்பர் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. HDFC வங்கி ₹10,000 மேற்பட்ட பரிவர்த்தனைகளுக்கு 1% கட்டணத்தை அறிவித்துள்ளது. ICICI வங்கி ஏடிஎம் பரிவர்த்தனைகளில் இலவச வரம்பை குறைத்து, அதற்கு மேல் பணம் எடுக்க ரூ.23 வரை கட்டணம் வசூலிக்கிறது. பயனாளர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய முக்கிய மாற்றங்கள் இவை.